Radhika Sarathkumar : 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தனது கணவர் ஆர். சரத்குமாருடன் அதிமுகவில் இணைந்தார் . [12] 18 அக்டோபர் 2006 அன்று, கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆந்திராவில் சில மாதங்களுக்கு முன்பு ஊழல் வழக்கில் கைதான முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடுவை அமைச்சரான நடிகை ரோஜா விமர்சித்ததற்காக, தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்யநாராயணா,
ரோஜாவை ஆபாசமான வார்த்தைகளில் பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ராதிகா தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார். அதில், பெண்களை பாரத மாதாவாகத்தான் பார்க்கிறோம்.
ஆனால் இப்படித்தான் அவமரியாதை செய்வீர்களா? இந்த விவகாரத்தில் பிதமர் மோடி பெண்களுக்கு எதிரான இதுபோன்ற பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டுமென்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க : என்னடா இது ஓ.பி.எஸ்சுக்கு வந்த சோதனை!
காலம் கடந்தது…. இன்று சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.கவில் கரைத்துவிட்ட சரத்குமார், மனைவி ராதிகாவுடன் கன்னியாகுமரியில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் பங்கேற்றிருக்கிறார்.

மோடியின் வருகைக்கு முன்பாக அவர் குறித்து ராதிகா புகழ்ந்தும் பேசினார். இப்போது ராதிகா Radhika Sarathkumar, பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் தொகுதி வேட்பாளராகக் களமிறக்கி விடப்பட்டிருக்கிறார்.
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகள்தான் நடிகை ராதிகா. பெரியார் கொள்கையில் எம்.ஆர்.ராதா காட்டிய தீவிரம் மகளுக்கும் தொற்றிக் கொள்ள ராதிகாவோ திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளராக அறியப்பட்டார்.
சரத்குமாருடன் திருமணத்துக்குப் பின்னர் கடந்த 2006 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கணவருடன் சேர்ந்து அதிமுகவின் இணைந்தார். ஆனால் அவர் கட்சிவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக்கூறி அதிமுகவில் இருந்து 18 அக்டோபர் 2006ல் நீக்கப்படார்.
இதன்பின்னர் கணவர் சரத்குமார் ஆரம்பித்த சமத்துவ மக்கள் கட்சியின் துணைத்தலைவராக கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தவருக்கு தேர்தல் அனுபவம் என்பது கணவர் சரத்குமாருக்காக பிரச்சாரம் செய்தது மட்டுமே…
இப்போது கன்னிவேட்பாளராக விருதுநகரில் களம் இறக்கப்பட்டிருக்கிறார் ராதிகா. சினிமா நடிகையாக மட்டுமின்றி சின்னத்திரை நட்சத்திரமாக பெண்கள் மத்தியில் ராதிகாவுக்கு என்று ஸ்டார் வேல்யூ இருக்கத்தான் செய்கிறது.
இதே விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளரான விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளரும் களமிறங்க உள்ளனர்.
இதையும் படிங்க : ராமநாதபுரத்தில் ஜாதிப்பாசம் எடுபடுமா..?என்ன சொல்கிறது ஓ.பி.எஸ்.சின் அரசியல் ஜாதகம்?