மணிப்பூர் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கடந்த 2022 ஆண்டு நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி (rahul gandhi) பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மணிப்பூரில் மெய்திசமூகத்தினர் தங்களைப் பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால் இதற்கு குக்கி பழங்குடி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போராட்டம் முற்றிய நிலையில் வன்முறையாக வெடித்து தற்போது வரை நீடிக்கிறது.
கிட்டத்தட்ட மணிப்பூரில் 2 மாதங்களாக நீடிக்கும் இந்த வன்முறை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நேற்று குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை, சிலர் சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்ற வீடியோ தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் மே 4 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர். பிரதமர்,உச்சநீதிமன்றம் என பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிய வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில்,அணைத்து பக்கமும் நமது நாடு சூழப்பட்டு உள்ளது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இதனை நான் விரும்பவில்லை .மேலும் நமது நாடு கூட்டாட்சி முறையில் செயல்பட வேண்டுமென்பதற்காக எனது கொள்ளுத்தாத்தா சிறை சென்றார், எனது பாட்டி 32 முறை சுடப்பட்டார். மேலும் எனது தந்தை கொல்லப்பட்டார். நீங்கள் ஆபத்துதான் விளையாடிக் கொண்டு இருக்கிறீர்கள்.வட இந்திய மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்து வருகின்றனர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.