தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (10.07.23) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் முன்னதாக அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ம் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரத்தில் ணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ஆகிய 20 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.