TN Rain Alert-வடகிழக்கு பருவ மழை தென் இந்திய பகுதிகளில் இருந்து வரும் 15ஆம் தேதி விலக வாய்ப்புள்ளது. குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்யும்:தமிழகத்தில் மிக்ஜாம் புயல் தாக்கத்தில் இருந்து மக்கள் படிப்படியாக மீண்டு வரும் நிலையில்,
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன் படி கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (டிச. 13 ) மற்றும் நாளை (டிச. 14) தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
அதே போல டிச.15ம் தேதியும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.மேலும் டிச. 16 மற்றும் டிச. 17 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் குறிப்பாக கன்னியாகுமரி,
திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அதே போல டிச. 18 மற்றும் டிச. 19ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
11.01.2024: மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று
மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
12.01.2024: குமரிக்கடல் பகுதிகள், மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று
மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
Also Read :https://x.com/ITamilTVNews/status/1746068495950074321?s=20
13.01.2024: தென்கிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று
மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
14.01.2024: தென்மேற்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று
மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள் என்று வானிலை ஆய்வு மையம்(TN Rain Alert) தெரிவித்துள்ளது.