ராஜஸ்தான் மாநிலத்தில்(rajasthan assembly election) 200 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவை தேர்தல் கரண்பூர் தொகுதி மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.
சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
ஆனால் 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் கரண்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மித் சிங் மரணம் ஆடைந்தததால் அங்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.
தேர்தலில் களத்தில் 1875 பேர் உள்ள நிலையில், 5 கோடியே 25 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மேலும் வரும் டிசம்பர் 3-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.