இஸ்லாமியர்களின் பொறுமையை தவறாக புரிந்து கொண்டு கண்ட கழிசடைகளும் பேச ஆரமித்தால் அதன் விளைவு மிக மோசமாக இருக்கும் என சீமானை எச்சரிக்கும் விதமாக ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் தொடரும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களைத் தடுக்கத் தவறிய இந்திய ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில பாஜக அரசுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய சீமான் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை நாம் தேவனின் பிள்ளைகள் என்று ஆனால் அவர்கள் சாத்தானின் பிள்ளைகளாக மாரி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. நமது நாட்டில் நடந்து கொண்டு இருக்கும் அணைத்து அநீதிகளுக்கும் இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்கள் தான் பொறுப்பு என பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ராஜ்கிரணின் FACEBOOK பதிவு பேசு பொருளாக மாறியுள்ளது. இது குறித்து அவர் பதிவிட்டுள்ள FACEBOOK பதிவில்,இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும்,எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும்,
அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு,தங்களால் முடிந்த உதவிகளைபிற சமுதாயத்தினருக்கும் செய்து கொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம்,இயலாமையோ, கோழைத்தனமோ,அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல…
“இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்.இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால்”,பொறுமை காக்க வேண்டும் என்று,
இறைவனின் இறுதி தூதுவர்,இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்.
இந்தப்பொறுமையை,தவறாகப்புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால்,அதன் விளைவு மிக மோசமாயிருக்கும் என தெரிவித்துள்ளார்.