நாடு முழுவதும் இன்று (11.04.24) வியாழக்கிழமை புனித பண்டிகையான இஸ்லாமியர்களின் ரமலான் ramadan உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ரமலான் பண்டிகைக்கு முன்பாக ஒரு மாத காலம் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது மரபு.
இதையும் படிங்க : உச்சினிமாகாளி பிறந்த வரலாறு : எப்பேற்பட்ட நோய்களும் குணமாகும் அதிசயம்!
நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சஹர் என அழைக்கப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு, அதன் பிறகு சூரியன் மறையும் வரை உணவு ஏதும் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டு ரமலான் பண்டிகை இன்று (11.04.24) கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார்.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் இன்று அதிகாலையில் பள்ளிவாசல்களில் சிறப்பு ரமலான் தொழுகை நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து பங்கேற்றனர் தொடர்ந்து சிறப்பு தொழுகைக்குப் பின்னர் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
இனிப்புகளையும் பரிமாறி மகிழ்ந்தனர். ரமலான் பண்டிகைக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். அதில்,
“புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை,
உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் ramadan திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : காரைக்குடியில் அமித்ஷாவின் வாகன பேரணி ரத்து