பெண்கள் தினமும் காலையில் கோலம் (rangoli) போடும் பொழுது தங்களுடைய உடலை வளைத்து கோலம் போடுவதனால், முதுகு எலும்பு பிரச்சனைகள் நீங்கி முதுகுத்தண்டு வலிமையாகிறது.
தினமும் காலையில் 20 நிமிடங்கள் குனிந்து கோலம் (rangoli) போடும்போது நாம் மூன்று விதமான யோகா செய்யும் முறையை பயன்படுத்துகிறோம். அதில், முதலாவதாக மலாசனா என்று சொல்லப்படும் ஆசனம்.
இது மிகவும் பொதுவான ஒரு ஆசனம். இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இரண்டாவது உக்ராசனம் இது நம் இரண்டு கால் முட்டிகளையும் மடக்கி ஒரு நாற்காலியில் அமர்வதைப் போன்று ஒரு செயல்முறை. இந்த செயல்முறையின் போது கைகள் இரண்டையும் நம்முடைய தொடைய அருகில் வைத்து நாற்காலியில் அமர்வது போன்ற ஒரு அமைப்பில் நின்று கோலம் போடுகிறோம்.
மூன்றாவதாக வஜ்ராசனம்.. இது நம்முடைய இரண்டு கால் முட்டிகளையும் மடக்கி தரையில் அமர்ந்து கோலம் போடுவது போன்ற முறை. இந்த மூன்றும் யோகா முறைகளையும் 20 நிமிடத்திற்கு தினமும் மாற்றி மாற்று செய்யும் பொழுது பெல்விக் மசில்ஸ் மற்றும் லோயர் பேக் மசில்ஸ் வலிமையடைகிறது.
இதனால், முதுகுத்தண்டு வலி குறைகிறது மற்றும் காப் மசில்ஸ் ஆகியவை வலிமை பெறுவதனால் முட்டி வலி குறைகிறது. இந்த மூன்று யோகா முறைகளும் gastrocolic reflex என்னும் ஒன்றை தூண்டி நம்முடைய செரிமான அமைப்பை சீர்படுத்துகிறது.
தினமும் இதுபோன்று நாம் கோலம் போடும் பொழுது புதுப்புது வகையான யுக்திகளை யோசித்து கோலம் போடுவதால் நம்முடைய கிரியேட்டிவிட்டி மேம்படுகிறது. அது மட்டும் இல்லாமல் தினமும் 20 நிமிடம் கவனம் செலுத்தி கோலம் போடுவதனால் நம்முடைய கவனிக்கும் திறன் மேம்படுகிறது.