ஆர்.பி.ஐ என்று அழைக்கப்படும் ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் நோட்டுகள் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே செல்லும் என்றும் அதனால் பொது மக்கள் அனைவரும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அருகில் உள்ள வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டுமென அறிவித்திருந்தது .
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அதற்கான விரிவான விளக்கத்தையும் சில நாட்களுக்கு முன் ஆர்.பி.ஐ வெளியிட்டிருந்தது .
இந்நிலையில் 2000 நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவை எட்டுவதற்கு காரணமாக அமைந்த தரவுகளை கேட்டு சாகேத் கோகலே என்பவர் ரிசர்வ் வங்கியிடம் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ. மனுவுக்கு, அதை வழங்கினால், வெளிநாடுகளுடனான இந்தியாவின் உறவை பாதிக்கும் எனக்கூறி தரவுகளை வழங்க ஆர்.பி.ஐ மறுத்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கும் வெளிநாட்டு உறவுக்கும் என்ன சம்மந்தம்? பணமதிப்பிழப்பு நடவடிக்கை திடீரென எதற்காக எடுக்கப்பட்டது? புழக்கத்தில் இருந்த 2000 நோட்டுகள் ஏன் திரும்பப் பெறப்பட்டது என்பதை ஆர்.பி.ஐ, மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் கொடுக்க வேண்டும் என சாகேத் கோகலே எதிர் கேள்வி கேட்டுள்ளார் .