ready to discuss jayalalithaa : ஜெயலலிதா ஒரு இந்துத்துவவாதி தான் என்று நான் விவாதிக்க தயார் என்று பாஜக தலைவர் அண்னாமலை செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து பாஜக தலைவர் அண்னாமலை கூறியதாவது..
“தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் நிச்சயம் வெற்றிபெறும். இந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முக்கிய தலைவர்கள் போட்டியிட்டு உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து பாஜக உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வார்கள். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 தொகுதிகளில் அபார வெற்றி பெறும்.
கடந்த 2019 தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட்டு டெபாசிட்டை இழந்தார். சினிமாவை பொறுத்தவரை பிரகாஷ்ராஜ் ஒரு நல்ல நடிகர்.
ஆனால், நிஜத்தில் மோடியை திட்டுவதை மட்டுமே பிரகாஷ்ராஜ் முழுநேர வேலையாக வைத்திருக்கிறார். பாஜகவை பற்றி பேசுவதற்கு, அரசியல் அனுபவம் இல்லாதவர் தான் நடிகர் பிரகாஷ் ராஜ்.
இதையும் படிங்க :
பிரதமர் நரேந்திர மோடி பேசுவதை எதிர்க்கட்சியினர் திரித்து பேசி வருகின்றனர்.
குறிப்பாக, திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் கருத்துரிமையை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.
விமர்சனம் செய்வது என்பது தவறில்லை; ஆனால், பேசும் வார்த்தையில் கவனம் தேவை. அதை புரிந்து கொண்டு விசிக தலைவர் திருமாவளவன் பொறுப்புணர்வோடு பேச வேண்டும்.
எல்லா இஸ்லாமியர்களும் ஓபிசி என்பதை தான் நாங்கள் எதிர்க்கிறோம். மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை பாஜக எதிர்க்கிறது. மாட்டுக்கறி சாப்பிடுவது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.
நான் மாட்டை தெய்வமாக பார்க்கிறவன். நீங்கள் மாட்டிறைச்சி சாப்பிடுங்கள்; ஆனால், அதை என்னை சமைத்து கொடுக்க சொல்வது என்ன நியாயம்.
ஜெயலலிதா ஒரு இந்துத்துவாவாதி தான், இந்துத்துவா என்பது மதம் அல்ல வாழ்வியல் முறை. அனைவரையும் அரவணைத்து செல்வது தான் இந்துத்துவம். என் இந்துத்துவம் அனைவரையும் அரவணைத்து செல்வது தான்.
ஜெயலலிதா கரசேவை தவறான இயக்கம் அல்ல என பேசியவர். ராமர் கோவில் கட்ட வேண்டும் என கையெழுத்து இயக்கம் நடத்தியவர். ஜெயலலிதா தான் தமிழகத்தில் வேதபாடசாலையை உருவாக்கினார்.
அவர் இப்போது இருந்திருந்தால், முதல் ஆளாக அவர் தான் ராமர் கோவிலுக்கு சென்றிருப்பார். இதன் மூலம் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவாவாதி தான்.
ஜெயலலிதாவை இந்துத்துவாவாதி என கூறுவதில் என்ன தவறு உள்ளது. ஜெயலலிதா இந்துத்துவாவாதி என்பது குறித்து விவாதிக்க நான் தயார். என்னுடன் யார் வேண்டுமானாலும் விவாதிக்க வரலாம் ready to discuss jayalalithaa.
ஒரு விவாதம், விவாதமாக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.