Rebel : ஜிவி பிரகாஷ் குமார் – பிரேமலு பட நாயகி மமிதா பைஜு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ரெபல். இந்த படத்தை புதுமுக இயக்குநர் நிகேஷ் இயக்கியுள்ளார்.
1990-ல் கேரளாவில் இயக்குநர் நிகேஷின் உறவினர் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் பின்னணி தான் ரெபல் திரைப்படம்.
இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். படத்தில் கருணாஸ், இயக்குநர் சுப்பிரமணிய சிவா, கல்லூரி வினோத் உள்பட பலர் நடித்துள்ளார்கள்.
இதையும் படிங்க : அடம் பிடிக்கும் அன்புமணி..! பாஜகவுக்கு பச்சைக் கொடியா..?
ரெபல் (Rebel) கதை :
ரெபல் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கதைப்படி, கேரளாவில் செயல்பட்டு வரும் கல்லூரி ஒன்றில் படிக்கும் தமிழ் மாணவர்களை எதிரணி கும்பல், உள்ளூர் அரசியல் புள்ளிகளுடன் இணைந்து கொடுமைப் படுத்துகிறார்கள்.
கேரளாவில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தலுக்கு எதிராகவும் தமிழுக்கான உரிமையை மீட்டெடுக்கும் விதமாகவும் படத்தின் திரைக்கதை அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் வருகிற 22ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், ரெபல் பட ட்ரெய்லரை பார்த்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி பார்த்து வியந்தேன் என்றும், படத்தை திரையில் பார்க்க ஆர்வமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது..
“ஆருயிர் இளவல் ஜி.வி.பிரகாஷ்குமார் அவர்களின் நடிப்பில் வெளியாகவிருக்கும் REBEL (ரெபெல்) திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி பார்த்து வியந்தேன்.
நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு தமிழ் மக்களின் உரிமை பேசும் திரைப்படம் ஒன்று வெளியாகவிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
முன்னோட்ட காணொளியில் இடம்பெற்றுள்ள விறுவிறுப்பான காட்சிகளும், அழுத்தமான வசனங்களும் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவதோடு, திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கையையும் அளிக்கிறது.
தம்பி ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! எனத் தெரிவித்துள்ளார்.