சென்னையில் பேருந்தை இயக்கியபடி ரீல்ஸ் எடுத்த ஓட்டுனரையும் நடத்துநரையும் பணிநீக்கம் செய்து போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னையில் ஆபத்தான முறையில் மாநகர பேருந்தை இயக்கியபடியே ரீல்ஸ் பதிவிட்ட ஓட்டுநர், நடத்துநர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Also Read : ஆமை வேகத்தில் நடக்கும் ரயில்வே பணிகள் – விஜய் வசந்த் எம்.பி..!!
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஓடும் பேருந்தில் ரீல்ஸ் எடுத்த வீடியோ இணையத்தில் செம வைரலாக வலம் வந்த நிலையில் தற்போது அந்த இருவர் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திடம் இருவரையும் உடனடியாக பணிநீக்கம் செய்ய மாநகரப் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ள்ள நிலையில் இதுபோன்ற பொறுப்பற்ற நபர்களை பணிக்கு சேர்ப்பதற்கு முன் பயிற்சி வகுப்பில் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.