இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்(Aishwarya Rajesh)நடிப்பில் உருவாகி வரும் ‘பர்ஹானா'( ‘Farhana’) திரைப்படம் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
படப்பிடிப்பை குறித்த நேரத்தில் சிறப்பாக முடித்துள்ளதாகவும், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கூட கடைசி கட்டத்தில் இருப்பதாகவும் படத்தின் யூனிட்டுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இப்படத்தின் முதல் பாடலை வெள்ளிக்கிழமை படக்குழுவினர் வெளியிடனர்.
‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’ மற்றும் ‘கைதி’ போன்ற பிளாக்பஸ்டர்களை உருவாக்கியதற்காக அறியப்பட்ட ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா(Aishwarya Rajesh)இதுவரை அவர் செய்யாத கேரக்டரில் நடிக்கிறார்.
‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘மான்ஸ்டர்’, ‘ராட்சசி’ போன்ற படங்களில் காட்சியமைத்த கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் திருமணமான ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்தின் இசையமைப்பாளராகவும், தேசிய விருது பெற்ற சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
பிரபல கவிஞரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். எழுத்தாளர்கள் சங்கர் தாஸ் மற்றும் ரஞ்சித் ரவீந்திரன் ஆகியோர் இயக்குனர் நெல்சனுடன் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர்.
#OrrKadhalKanaa Lyric Video from #Farhana is here 🎶
🎙️: @AdnanSamiLive, @goldiesohel & @hariniivaturi
✍🏽: @UmadeviOfficial
A @justin_tunes Musical pic.twitter.com/49WsZw4iPO
— aishwarya rajesh (@aishu_dil) October 7, 2022
ஜூன் மாதம் அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்பட்ட சுழல் என்ற வெப் தொடருக்குப் பிறகு ஐஸ்வர்யா ராஜேஷின் முதல் வெளியீடாக ஃபர்ஹானா இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.