மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளே புகைப்படங்கள் எடுக்கவோ, அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்கு தடை விதிக்கவோ முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் எடுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் சிலைகளின் புகைப்படங்கள் ,விடியோக்கள் உள்ளிட்டவைகளை சமூகவலைத்தளங்களில் இருந்து நீக்க கோரி கடந்த சில வாரங்களாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு வழங்கியது.அமெரிக்கா போன்ற நாடுகள் அங்கே 100 வருட புராதன சின்னங்கள் என்று கூறி படங்களை எடுத்து பல கோடிக்கு வியாபாரம் செய்யும் சூழலில்,
நாம் 2000 வருட புராதன சின்னங்களை வைத்துக் கொண்டு சும்மா இருக்கிறோம் நீதிபதிகள் சுப்ரமணியன்,விக்டோரியா கவுரி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
மேலும் கோயிலில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் சிலைகளின் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.