பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தினால் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பின்னடைவு ஏற்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள ரிசர்வ் வங்கி கூறியதாவது :
அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தும். இத்திட்டம் நடைமுறைக்கு திரும்பினால் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவுகளை மாநில அரசுகள் குறைக்க வேண்டியிருக்கும்.
தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு திரும்ப வலியுறுத்தி வரும் நிலையில், அவர்களுக்கு செவி சாய்த்து மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால் வருக்காலத்தில் கடும் சிரமதிக்கிற்கு ஆளாக வாய்ப்புள்ளது என்றும் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நம் இந்திய திருநாட்டில் ஏற்கனவே பொருளாதாரத்தின் நிலை சற்று மோசமாக இருக்கும் நிலையில் லஞ்சம் , கருப்பு பணம் வருமா வரி ஏய்ப்பு உள்ளிட்டவை தற்போது நாடு முழுவதும் தலைவிரித்து ஆடி வருகிறது.
இந்நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தினால் நாட்டின் பொருளாதாரத்திற்குப் நிச்சயம் பின்னடைவு ஏற்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.