கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு எதற்கு நிவாரணம் . அரசின் நிவாரண ( Premalatha question ) அறிவிப்பு கள்ளச்சாராயம் குடிப்பவர்களை ஊக்குவிப்பதுபோல் உள்ளது என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் இச்சம்பவம் குறித்து கூறியதாவது :
முதலில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு எதற்காக ரூ.10 லட்சம் நிவாரணம் இது முற்றிலும் தவறானது . அரசின் இந்த நிவாரண அறிவிப்பு கள்ளச்சாராயம் குடிப்பவர்களை ஊக்குவிப்பதுபோல் உள்ளது.
Also Read : கள்ளச்சாராய வியாபாரியுடன் அமைச்சருக்கு நெருங்கிய உறவு – அன்புமணி குற்றச்சாட்டு..!!
எல்லோருமே டாஸ்மாக்கை கூட மூட வேண்டும் என்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோது, முதலில் வந்து எல்லோரையும் சந்தித்த முதல்வர், இன்று ஏன் இங்கு வரவில்லை.
கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்படும்போதெல்லாம் முதலில் பலிகடா ஆவது அதிகாரிகள் தான். அதிகாரிகளை இடம் மாற்றினால் போன உயிர் திரும்பி வந்துவிடுமா? போதை இல்லாத தமிழகம் ( Premalatha question ) என திமுக அளித்த வாக்குறுதி என்னவானது? என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.