இந்தக் கதையை வெள்ளிக்கிழமைதோறும் விளக்கேற்றி வைத்து கேட்டால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம்.
அமுதத்திற்காக வேண்டி பாற்கடலை கடைய தேவர்களும், தேவர்களின் அரசனான இந்திரனும் முடிவு செய்தார்கள். அதற்காக மந்திர மலையை மத்தாகவும், சிவபெருமானின் கழுத்தில் நாகாபரணமாக இருக்கும் வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு கடைய முடிவெடுத்தார்கள்.
அதற்கு தேவர்கள் மட்டும் போதாதென அரக்கர்களுக்கும் சமபங்கு தருவதாகக் கூறி அவர்களையும் அழைத்தார்கள். வாசுகி பாம்பின் ஒரு புறம் தேவர்களும், மறுபுறம் அரக்கர்களும் இணைந்து பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள்.
மந்திரமலையானது பாற்கடலினுள் மூழ்கத் தொடங்கியது. எனவே திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து, மந்திர மலையைத் தாங்கினார். தேவர்களும் அரக்கர்களும் மீண்டும் பாற்கடலைக் கடைந்தனர்.
அதில் முதலில் பாற்கடல் கடைந்த பொது மூதேவி அவதரித்தாள் இதனை அசுரர்கள் ஏற்று கொண்டனர். பின்னர் அசுரர்களும் தேவர்களும் பார்க்கடலை கடைய இரண்டாவதாக தாமரையில் அவதரித்தவள் தான் லட்சுமி.
ஸ்ரீ வைபவ லக்ஷ்ம்யை நம
ஸரஸிஜ நயனே ஸரோஜ ஹஸ்தே
தவளதராம்சுக கந்த மால்ய சோபே
பகவதி ஹரிவல்லபே மனோஜ்ஞே
த்ரிபுவன பூதகரி ப்ரஸீத மஹ்யம்
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் பூஜை அருகில் ஒன்று, ஏழு 21 புத்தகங்களை வைத்து அதனுடன் வெற்றிலை பாக்கு பூக்கள், பழங்கள், மஞ்சள் குங்குமம் தாலி சரடு வளையல், ஆகியவற்றை சுமங்கலிகளுக்கு தானம் செய்தால் செல்வம் பெருகும்.
இந்த மந்திரத்தால் புத்திர பாக்கியம், தாலிபாக்கியம் ,உடல் நலம், வழக்குகளில் வெற்றி கிட்டும்