பொதுப்போக்குவரத்து வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

renewal-of-vehicle-certificate-and-driving-license-extension
renewal of vehiclecertificate and driving license extension-

பொதுப்போக்குவரத்து வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை டிசம்பர். 31 ஆம் தேதி வரை நீடித்து மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக வாகன பதிவு உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் செல்லுபடியாகும் கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி வாகன பதிவு உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் செல்லுபடியாகும் கால அவகாசம் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

இதன் காரணமாக மோட்டார் வாகன சட்டம் 1988 மற்றும் மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 இன் கீழ் அனைத்து சம்பந்தப்பட்ட ஆவணங்களும் நீடிக்கப்பட்டது.
இந்நிலையில் பொதுப் போக்குவரத்து வாகனங்களின் அனைத்து ஆவணங்களின் தகுதி சான்று புதுப்பித்தல், அனுமதிச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு செல்லுபடியாகும் கால அளவு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

renewal-of-vehicle-certificate-and-driving-license-extension-
renewal of vehiclecertificate and driving license extension-

ஏற்கனவே அக்டோபர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக பொது போக்குவரத்திற்கான சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் தற்போது டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. .

Total
0
Shares
Related Posts