காமராஜர் சாலையில் குடியரசு தின விழாவுக்கான (Republic day) இறுதிகட்ட ஒத்திகை இன்று நடைபெற்றது.
நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி (நாளை மறு நாள் வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
குடியரசு தின விழா (Republic day) மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே தமிழக அரசின் சார்பில் நடத்தப்படுகிறது.
இந்த விழாவை தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Omni buses கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும்-சேகர்பாபு
ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை மாநகர் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
சென்னை மாநகர் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குடியரசு தினத்தன்று மாலை 4.30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் வைத்து தேநீர் விருந்து நடைபெற உள்ளது.
இதையும் படிங்க : Madurai Jallikattu அரங்கில் சவுக்கு சங்கர் சிலை? நன்றி தெரிவித்த சவுக்கு சங்கர்
ஆளுநரின் தேநீர் விருந்து – காங்கிரஸ் கட்சி புறக்கணி
இந்த தேநீர் விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் அறிவித்துள்ளார்.
ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
https://x.com/ITamilTVNews/status/1750048779901014204?s=20
ஆளுநர் மாளிகை அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சியினரும் அறிவித்துள்ளனர்.
ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்பது குறித்து திமுக ஆலோசித்து முடிவெடுக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது.
குடியரசு தின விழாவையொட்டி தமிழக ஆளுநர் அளிக்கவுள்ள தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.