இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை (republic day) முன்னிட்டு இன்று மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
இந்தியாவின் 75வது குடியரசு தினம் (republic day) இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவுக்காக போக்குவரத்து காவல் படையினரின் வாகன அணிவகுப்புடன் காலை 7.50 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் வந்தார். அவரை தொடர்ந்து ஆளுநர் ரவி, ராணுவ வாகன அணிவகுப்புடனும் விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார்.
பின்னர் காலை 8 மணிக்கு மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார்.
இதையும் படிங்க : Bhavadharani: சென்னைக்கு கொண்டுவரப்படும் பவதாரிணி உடல்!
அப்போது தேசிய கீதமும் இசைக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ராணுவம், விமானப்படை, கடலோர காவல் படை, கடற்படை, தமிழக காவல் துறை, தேசிய மாணவர் படை, வனம், சிறை, தீயணைப்பு துறைகளின் படைப்பிரிவினர்.
மற்றும் பள்ளி, கல்லூரி பேண்டு வாத்திய குழுவினர், சாரண, சாரணியர், ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இதனை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக விளையாட்டு, வேளாண்மை, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் உட்பட தமிழக அரசின் சாதனையை விளக்கும் துறைசார்ந்த 22 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறுகிறது.
https://x.com/ITamilTVNews/status/1750750130335351225?s=20
இதைத்தொடர்ந்து அரசுப் பள்ளி , அரசு கல்லூரி மாணவிகள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவிகளின் தமிழக பாரம்பரிய கலை கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
ஒடிசா மற்றும் மணிப்பூர் மாநில பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனிடையே, இவ்விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், சிறப்பு அழைப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.