அண்மையில் உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்த ரோபோ சங்கர் (robo shankar) தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசி உள்ளார்.
நடிகர் ரோபோ சங்கர் (robo shankar) “கலக்கப்போவது யாரு”, “அது இது எது” போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்கள் மத்தியிலும், சின்னத்திரையிலும் பிரபலமான நிலையில், படிப்படியாக வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைத்து தற்போது கோலிவுட்டில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், ரோபோ சங்கர் சமீபத்தில் உடல் எடை குறைந்து மெலிந்த தோற்றத்தில் இருப்பதை பார்த்த அவரது ரசிகர்கள், அவருக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வந்தனர்.
மேலும், அவரது தற்போதைய உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் பரவி வந்த நிலையில், தற்போது தன்னுடைய உடல்நிலை குறித்து நடிகர் ரோபோ சங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
அந்த பேட்டியில் பேசிய ரோபோ சங்கர்.. “உடல் எடையை குறைக்க வேண்டும் என்று டயட்டில் இருந்த போது தனக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதன் காரணமாக தான் உடல் எடை வேகமாக குறைந்துவிட்டது என்றும், நல்ல வேலையாக எனக்கு நல்ல மருத்துவர்கள் அமைந்ததால் எனக்கு நல்ல சிகிச்சை அளித்தார்கள்.
மேலும், என் மனைவி, என் குழந்தைகள் மற்றும் என்னுடைய நண்பர்கள் என அனைவரின் கவனிப்பால் தான் என்னால் விரைவில் பழைய நிலைக்கு திரும்ப முடிந்தது எனக் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், கடந்த 4 மாதங்களாக நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்த்ததால் தான் என்னால் சீக்கிரம் குணமடைய முடிந்தது என்றும், அதிலும் ராமர் காமெடியை பார்த்து பெட்டில் உருண்டு உருண்டு சிரித்ததாகவும் கூறியுள்ளார்.