2024 ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே ‘ரோகித் சர்மா rohit sharma, மும்பை இந்தியன்ஸ், ஹர்திக் பாண்டியா’ என்ற மூன்று பெயர்கள் தான் தலைப்புச் செய்திகளில் இருந்து வருகின்றன.
கடந்த 2023 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டு, 2024 ஐபிஎல் தொடரில் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.
அன்றிலிருந்து ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா பெயர்களுக்கு இடையேயான பிரச்னை விஸ்வரூபம் எடுத்து உள்ளது.
ரோகித் சர்மாவின் கேப்டன்சி பறிபோனதற்கு காரணமாக இருந்தது, அவரை பவுண்டரி லைனுக்கு அலைக்கழித்தது என பல விஷயங்களால் ஹர்திக் பாண்டியா மீது ரசிகர்கள் அதிருப்தியுடன் இருக்கின்றனர்.
இதனால் ஒவ்வொரு போட்டியின் போதும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்து வரும் ரசிகர்கள், ரோஹித்திற்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நடவடிக்கையில் திருப்தியடையாத ரோகித் சர்மா, MI அணியிலிருந்து வெளியேறும் முடிவுக்கு வந்து, அதன் பின்னர் இத்தனை ஆண்டுகள் ஆதரவளித்த அணிக்காக ஒரு சீசன் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில் ரோகித் சர்மா 2025 மெகா ஐபிஎல் ஏலத்தின் போது மும்பை அணியிலிருந்து வெளியேறிவிடுவார் என்றும் உறுதியான தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்டியா, கேப்டன்சியில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
இதனிடையே டிரெஸ்ஸிங் ரூமில், போட்டியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளால் ரோகித் சர்மாவிற்கும், கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக்கின் செயல்பாடுகளில் அதிருப்தியுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹர்திக் பாண்டியாவின் அணுகுமுறையால் அதிருப்தியில் இருக்கும் ரோகித் சர்மா rohit sharma, அடுத்த வருடம் நடக்கவிருக்கும் மெகா ஏலத்தில் நிச்சயம் வேறு அணிக்கு செல்லும் முடிவில் இருக்கிறார்.
இதனிடையே இந்தியாவின் வெற்றிக் கேப்டனாகவும், பேட்டிங்கில் ஃபார்மில் இருந்துவரும் ரோகித் சர்மாவை அனைத்து அணிகளும் தக்கவைத்துக்கொள்ள ஆரவமாக இருந்துவருகின்றன.
இன்னும் இரண்டு போட்டிகளில் மட்டும் ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டனாக வாய்ப்பை வழங்க இருப்பதாகவும், அதிலும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்படா விட்டால் அவரிடமிருந்து கேப்டன்சியை பறித்து மீண்டும் ரோகித் சர்மாவிடமே வழங்கவும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, கேப்டன்சி பொறுப்பை ஏற்கும்படி மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ரோகித் சர்மாவிடம் கேட்டதாகவும், ஆனால் அதனை அவர் மறுத்துவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் அவரை வேறு அணியில் கேப்டனாக பார்க்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர். ஆனால், ரோகித் சர்மா என்ன முடிவுதான் எடுக்கப்போறார் அப்டீன்றத பொறுத்திருந்துதான் பாக்கணும்.