பெண் குழந்தையின் பெற்றோருக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவித்துள்ளார்.
பெண் குழந்தை பிறந்தாலே செலவு என கருதி பெண்சிசுக் கொலைகளை கொலை செய்வது கிராமங்களில் இன்னும் தொடர்ந்து வருகின்றன. இதனைத் தடுக்க தடுக்க மத்திய மாநில அரசுகள் பலசலுகைகளை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் பெண் குழந்தைகளை காக்கும் வகையில் இமாச்சல முதல்வர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி பெண் குழந்தையின் பெற்றோருக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவித்துள்ளார்.
அதே போல் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் குடும்பக் கட்டுப்பாட்டைப் பின்பற்றும் பெற்றோருக்கு ரூ.2 லட்சமும், 2 பெண் குழந்தைகள் பிறந்த பிறகு குழந்தை வேண்டாம் என குடும்ப கட்டுப்பாடு செய்பவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவித்துள்ளார்.