ஆங்கில புத்தாண்டையொட்டி, நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை (sabarimala) அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது.
பின்னர் ஆரன்முளா ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலிலிருந்து புறப்பட்ட தங்க அங்கியுடன் கூடிய ஊர்வலம், சபரிமலை சென்றடைந்து 27-ம் தேதி மண்டல பூஜையுடன் முடிவடைந்தது.
17-ஆம் தேதி முதல் மண்டல பூஜை தொடங்கி வழக்கமான பூஜை வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி மண்டல பூஜை முடிவடைந்ததும் இரவு நடை சாத்தப்பட்டது.
இதை அடுத்து மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை (sabarimala) கோவில் நடை கடந்த டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி திறக்கப்பட்டது. வருகிற 15-ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ஆங்கில புத்தாண்டையொட்டி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார்.
பெங்களூருவில் இருந்து உன்னிகிருஷ்ணன் என்ற பக்தர் தலைமையில் 18 ஆயிரத்து18 தேங்காய்களை சுமந்து வந்தனர். இவர்கள் சன்னிதானம் அருகே தேங்காய்களை குவித்து வைத்து அதை உடைத்து நெய்யை பெரிய பாத்திரத்தில் சேமித்து அபிஷேகத்திற்கு கொண்டு சென்று கொடுத்தனர். பின்னர் அபிேஷகம் நடந்தது.
https://itamiltv.com/devasam-board-reduced-the-number-of-bookings-for-mandala-poojai-darshan/
பின்னர் பக்தர்கள் 18-ஆம் படி வழியாக சென்று சன்னிதானத்தில் ஐயப்பனை தரிசனம் செய்தனர். ஆங்கில புத்தாண்டையொட்டி, நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பம்பை முதல் சன்னிதானம் வரை 5 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் 10:00 முதல் 12:00 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.