உலகளவில் பிரபலமடைந்த சபரிமலை கோயிலின் நடை இன்று ( Sabarimala temple ) திறக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் நடை திறக்கப்பட்டு விசேஷமான பூஜைகள் நடை பெறும்.
இதுமட்டுமின்றி ஒவ்வொரு மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் நடை திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு பூஜைகள் செய்யப்படும்.
இந்நிலையில் வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று (மே14) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டுள்ளது . இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது என சபரிமலை தேவஸ்தானம் அறிவிக்கப்பட்ட நிலையில் நடை திறக்கப்பட்டுள்ளது .
இதையடுத்து நாளை காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன் ( Sabarimala temple ) சிறப்பு பூஜைகளும் நடைபெறும் என்று சபரிமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.