நடப்பு ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தேதியை ஐபிஎல் ( IPL TICKET ) நிர்வாகம்அறிவித்துள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .
இந்நிலையில் தற்போது பரபரப்பாக நடைபெறும் லீக் சுற்றுகள் முடிவுக்கு வரவுள்ள நிலையில் விரைவில் ப்ளே ஆஃப் போட்டிகள் நடைபெற உள்ளது.
Also Read : மும்பை விளம்பரப்பலகை விபத்து – பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு..!!
இதுவரை நடத்த போட்டியின் முடிவில் மும்பை , பஞ்சாப் , குஜராத் ஆகிய அணிகள் நடப்பு தொடரில் சுற்றுடன் வெளியேறி உள்ளது.
இந்நிலையில் ப்ளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிகளை காண ரசிகர்கள் அனைவரும் வெறித்தனமாக காத்திருக்கும் நிலையில் தற்போது ப்ளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தேதியை ஐபிஎல் நிர்வாகம்அறிவித்துள்ளது.
சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, Rupay கார்டுகள் ( IPL TICKET ) வைத்திருப்பவர்களுக்கு 20ம் தேதி மாலை 6 மணிக்கும், மற்றவர்களுக்கு 21ம் தேதி மாலை 6 மணிக்கும் தொடங்குகிறது.
