மும்பை விளம்பரப்பலகை விபத்தில் உயிரிழந்தவர்க்ளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி ( adboard Accident ) தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையின் காட்கோபர் பகுதியில் சுமார் 100 அடியில் வைக்கப்பட்டிருந்த ராட்ச விளம்பர பதாகை 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புழுதிப் புயல் காரணமாக எதிரே இருந்த பெட்ரோல் பங்க் மீது சரிந்து விழுந்தது .
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் சில பேர் பலியாகிய நிலையில் ஏரளமான பொதுமக்கள் காயமடைந்தனர்.
Also Read : தனியார் வங்கியின் ஏடிஎம் பணத்தை திருடிய பாதுகாலவர் கைது..!!
இந்த விபத்தின் சிசிடிவி கட்சிகளும் வெளியாகி பார்ப்போரை பதறவைத்தது . இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்க்ளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
விளம்பரப்பலகை விபத்து ஏற்பட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்ட ( adboard Accident ) மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்ததுடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் .