புதுக்கோட்டை அருகே சாமி தரிசனம் செய்ய வந்த சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் பகுதியில் கலக்குளத்தில் உள்ள கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய காயத்ரி (14), கவிஸ்ரீ (4) ஆகியோர் வந்துள்ளனர் . அப்போது இருவரும் குளத்தின் குறுக்குப் பாதையில் நடந்து செல்லும் போது பள்ளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
Also Read : லெபனான் மீது இஸ்ரேல் கோர தாக்குதல் – 19பேர் உயிரிழப்பு..!!
சகோதரிகள் தண்ணீரில் மூழ்கியதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்
கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இடத்தில் தண்ணீரில் மூழ்கி சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.