நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டில் காலரா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காத்மாண்டில் காலரா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காத்மாண்டில் உள்ள லலித்பூர் நகரில் 12 பேருக்கு காலரா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காலரா வைரஸ் தொற்றுக்கு நேற்று மட்டும் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை காலரா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்திரகிரி பகுதியிலும் சிலருக்கு காலரா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிகக்ப்பட்டுள்ளதாகவும் காலராவால் பாதிக்கப்பட்டவர்கள் டெகு நகரில் உள்ள சுக்ரராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், இருவர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலாரா அறிகுறிகள் இருப்பின் பொதுமக்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்து கொள்ளும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது.
தொடர்ந்து காலரா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருதால் பானி பூரி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பானிபூரிக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரில் காலரா தொற்றை பரப்பும் பாக்டீரியா இருபதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.