ஆசியாவில் உள்ள தங்கள் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகில் இருக்கும் டாப் எலெக்ட்ரானிக்ஸ் பிராண்டுகளில் ஒன்றாக சாம்சங் வலம் வருகிறது . உலகம் முழுவதும் சாம்சங்கின் சாம்பிராஜ்யம் படர்ந்து விரிந்துள்ள நிலையில் தற்போது ஆசியாவில் உள்ள தங்கள் நிறுவன ஊழியர்களை சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
Also Read : உலக கோடீஸ்வரர்களில் ஜெஃப் பிசோஸை முந்தி 2-ம் இடம் பிடித்தார் மார்க் ஸூகர்பெர்க்..!!
ஒருவேளை அப்படி நடந்தால் அந்நிறுவனத்தில் வேலைபார்க்கும் 10ல் ஒரு ஊழியர் வேலை இழக்கக் கூடிய சூழல் உருவாகும் என கூறப்படுகிறது.
நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தவும், ஊழியர்கள் படிநிலையை சீர் செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் இத்தனை ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டுமென்ற டார்க்கெட் எல்லாம் இல்லை என சாம்சங் விளக்கம் அளித்துள்ளது