அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக ஜாதி மோதல்களை ஏற்படுத்துகின்றனர் – திருச்சியில் இந்து முன்னணி மாநில பொது செயலாளர் முருகானந்தம் கடும் குற்றச்சாட்டு..
இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் திருச்சி மேலப்புதூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்..
விநாயகர் சதுர்த்தியின் விழாவின் நோக்கம் இந்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும், இந்து மதத்தில் உள்ள கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும் என்பது தான். இந்துக்களாக பிறந்தவர்களுக்கு இந்து மதத்தை சொல்ல யாரும் இல்லை.
சனாதனமும் இந்து மதமும் ஒன்றுதான். ஆனால், சில அரசியல் கட்சிகள் அது வேறு, வேறு என பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக ஜாதி மோதல்களை ஏற்படுத்துகின்றனர்.
அரியலூர் மாவட்டம் வி.களத்தூர் பகுதியில் மாற்று மதத்தினர் அதிகம் வசிப்பதாக கூறி காவல்துறை விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதி மறுத்துள்ளது பெண்களை தாக்கி இருக்கிறார்கள். அரியலூர் மற்றும் பெரம்பலூரில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது
இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக மாவட்ட காவல்துறையினர் அங்கிருந்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக மந்திரிகள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகிறார்கள். ஆனால் எல்லா மதத்தையும் ஒன்றாக பார்க்கிறேன் என்று கூறிய முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஸ்டாலின் சொல்லவில்லை என்றால் நாங்கள் கேட்க மாட்டோம்.
ஆனால் இந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கவில்லை அவர் சொல்லி இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
பேட்டியின் போது மாவட்ட பொதுச் செயலாளர் மனோஜ் குமார், மாவட்ட செயலாளர் சுரேஷ், அரியமங்கலம் பகுதி பொறுப்பாளர் மாரி, கௌரி சங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.