Sarathkumar campaigning in Ahmedabad-பாஜக பிரமுகரும் நடிகருமான சரத்குமார் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு குஜராத்தில் இந்தியிலும் , தமிழிலும் பிரசாரம் மேற்கொண்டார். தற்பொழுது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கபட்ட 18 வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19 தேதி ஜூன் 2 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 543 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபட உள்ளனர்.
7 கட்டமாக நடத்தப்படும் மக்களவைத் தேர்தலில் முதற்கட்டமாக தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடத்ததுவும் ,அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி யை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பாஜக கூட்டணி:
தேர்தல் தேதி அறிவிக்கபட்ட நாளில் இருந்து பாஜக காங்கிரஸ் கட்சிகளிடையே பணி போர் நிலவி வருகிறது. மீண்டும் ஆட்சி அமைக்க பாஜகவும் ,தவறவிட்ட ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ்யும் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மற்றும் வலுவான கூட்டணிகளை அமைத்து வருகிறது. அந்த வகையில், தென் இந்தியாவில், இதுவரை பாஜக ஆட்சி அமையவில்லை.இதற்காக வலுவான கூட்டணி அமைக்க பாஜக முடிவு செய்தது. அதன்படி பாஜக கூட்டணியில், பாமக, அமமுக,ஓபிஎஸ்சின் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு,தமமுக,இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி,தமிழ் மாநில காங்கிரஸ், ஜான் பாண்டியனின் தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று இருந்தது.
பாஜகவுடன் சமக கூட்டணி – சரத்குமார்:
இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்து அரசியலில் களத்தில் கவனம் பெற்றார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பாஜகவின் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் பிப்ரவரி 28-ம் தேதி என்னை நேரில் சந்தித்து, மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைப்பது குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில் ஒருமித்த கருத்துகள் உடன்பட்டதால் (05.03.2024) மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக தமிழக பொறுப்பாளர் அரவிந்த்மேனன் ஆகிய மூவரும் குழுவாக வந்து என்னை சந்தித்து கூட்டணி குறித்து மீண்டும் பேசினார்கள். இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தேறியது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு, மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஏற்கெனவே எனக்கு மக்களவைத் தேர்தலில் முடிவெடுக்கும் அதிகாரத்தினை வழங்கி, எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று உத்தரவாதம் அளித்தது.
அதன் அடிப்படையில், நாடு வளம் பெற, ஒற்றுமையுணர்வு ஓங்கிட, மீண்டும் நல்லாட்சி அமைந்திட மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பாரத பிரதமராக தேர்ந்தெடுக்க பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன். மற்ற விபரங்களை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்ததார்.
இதனை தொடர்ந்து , பிரதமர் மோடி முதல் அமித் ஷா, ராஜ்நாத்சிங் , நிதியமைச்சர் நிர்மலா உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்கள் தமிழகத்திற்க்கு படையெடுத்து தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டனர்.
தமிழக தேர்தல்:
அதன்படி , தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு (ஏப் .19 ) ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இதனை தொடர்ந்து , குஜராத்தில் உள்ள 26 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் மே 7ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ம் தேதியுடன் நிறைவடைந்தது.
குஜராத் 2024 நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் தொகுதிகள்:
கச், பனஸ்கந்தா, படான், மகேசனா, சபர்கந்தா, காந்திநகர், அகமதாபாத் கிழக்கு, அகமதாபாத் மேற்கு, சுரேந்திரநகர், ராஜ்கோட், போர்பந்தர், ஜாம்நகர், ஜூனாகத், அம்ரேலி, பாவ்நகர், ஆனந்த், கெடா, பஞ்சமஹால், தாஹோத், வதோதரா, சோட்டா உதய்பூர், பரூச், பர்தோலி , நவ்சாரி, வல்சாத் உள்ளிட்ட பகுதிகளிலில் மே 7 ஆம் தேதி வாக்குப்பதிவு தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ,”2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, குஜராத் மாநிலத்தின், அகமதாபாத் பகுதியில் அமைந்துள்ள மணிநகரில் நேற்று, அகமதாபாத் மேற்கு தொகுதி வேட்பாளர் திரு.தினேஷ்பாய் மக்வானா, அகமதாபாத் கிழக்கு தொகுதி வேட்பாளர் திரு.ஹஸ்முக்பாய் படேல் ஆகியோரை ஆதரித்து பாஜக பிரமுகரும் நடிகருமான சரத்குமார் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்,” தேசத்தின் ஒற்றுமை, நாட்டின் ஒற்றுமை என்ற அடிப்படையில் மக்கள் பெருந்திரளாக ஆரவாரத்துடன் மோடிஜியின் தலைமையை ஏற்க வந்திருந்ததை கண்டேன். மோடிஜியின் பத்தாண்டு சாதனைகளாலும், தன்னலமற்ற தொண்டர்கள் மற்றும் காரியகர்த்தாக்களின் அயராத உழைப்பாலும் பிரதமர் நரேந்திர மோடிஅவர்கள் 3- வது முறையாக பாரத பிரதமராக வர வேண்டும் என்று தமிழர்கள் வாழும் பகுதியில் ,தமிழிலும் அதன் பிறகு இந்தியிலும் பேசி பிரசாரம் மேற்கொண்டார்.தற்பொழுது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.