Sasikala :தமிழகத்தின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் வீராங்கனை வைஷாலி அர்ஜூனா விருது பெற்றதற்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறையில் சிறந்த பங்களிப்பை அளிக்கும் வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தி கவுரவிக்கும் விதமாக ஆண்டுத்தோறும் அர்ஜூனா விருது, கேல் ரத்னா, துரோணாச்சாரியா, மேஜர் தயான் சந்த் ஆகிய விருதுகள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், 2013ம் ஆண்டுக்கான விருதுப்பட்டியலை சமீபத்தில் மத்திய இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டது.
அதன்படி, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனை ஆர்.வைஷாலி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் (9.01.2024) நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதை வழங்கி கவுரவித்தார்.
இது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில்.. விளையாட்டுத் துறையில் சிறந்த பங்களிப்பை அளிக்கும் வீரர்,
வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக ஆண்டுத்தோறும் அர்ஜூனா விருது, கேல் ரத்னா, துரோணாச்சாரியா, மேஜர் தயான் சந்த் ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
இன்று டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரியும்,
Also Read : https://x.com/ITamilTVNews/status/1744962579485872541?s=20
தமிழகத்தின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் வீராங்கனையுமான வைஷாலிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தார்.
அர்ஜூனா விருது பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள வைஷாலிக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று உலகளவில் சாதிக்கும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியார் விருதை பெற்ற தமிழக செஸ் பயிற்சியாளர் திரு. ஆர்.பி. ரமேஷ் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
Also Read : https://itamiltv.com/we-will-maintain-our-government-schools-said-cm-stalin/
மேலும், வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருது பெற்ற தமிழகத்தின் முதல் கபடி வீராங்கனையான கவிதா செல்வராஜ் அவர்களுக்கும் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘அர்ஜூனா விருது’ பெற்ற வைஷாலி, வாழ்நாள் சாதனையாளருக்கான ‘தயான்சந்த் விருது’ பெற்ற கவிதா செல்வராஜ் மற்றும் துரோணாச்சாரியார் விருது பெற்ற ஆர்.பி. ரமேஷ் ஆகியோர்
மென்மேலும் பல சாதனைகளை புரிந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்று சசிகலா (Sasikala)குறிப்பிட்டுள்ளார்.