மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து கேள்விக்கு ரமணா படப்பாணியில் சசிகலா(vkSasikala) பதில் அளித்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு அண்ணா சிலைக்கு அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,அண்ணாவின் வார்த்தைகள் மற்றும் அறிவுரைகளை கொண்டு தனது அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டுவந்தவர் அம்மா என்று தெரிவித்தார். மேலும் புரட்சி தலைவர் எம்ஜியாரும் அம்மாவும் அண்ணாவின் வழி வந்தவர்கள் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து திமுக அரசு கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த செய்தியாளர் கேள்வி?தமிழ்நாட்டில் நிதியை மக்கள் அனைவரும் அறிய வேண்டும்.தமிழ்நாட்டில் மொத்தம் கடன் சுமை 7 லட்சத்து 53 ஆயிரம் கோடி கடன்சுமை உள்ளது.இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது இது வருந்தத்தக்க விஷயமாக உள்ளது என்று தெரிவித்த அவர்,
மேலும் திமுக அரசு ஆட்சிக்கு வந்து 28 மாதங்களில் அரசிற்கு 2லட்சத்து 20 ஆயிரம் கோடியாக அதிகரித்து உள்ளது.முன்னதாக நடைபெற்ற நிதியாண்டியில் செலவினங்களுக்காக கிட்டத்தட்ட 1லட்சத்து 87 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அதில் 87 ஆயிரம் கோடி பற்றாக்குறையாக உள்ளது. இது தான் நிலமையாக உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் அம்மாவின் ஆட்சி காலத்தில் 1லட்சத்து 14 கோடியாக மட்டுமே இருந்தது. அதிலும் ஏராளமான மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார் என்று தெரிவித்தார்.