பெண்களின் புகைப்படங்களை வைத்து 2 ஆண்டுகளாகப் பண மோசடியில் ஈடுபட்டு வந்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மரக்காணத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்ற இளைஞர் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலி சமூகவலைத்தள கணக்குகளை உருவாக்கி சுமார் 2 ஆண்டுகளாக ஆண்களிடம் பண மோசடி செய்து வந்துள்ளார்.
Also Read : திருப்பூரில் ஏற்பட்ட வெடி விபத்து – 2 பேர் பலி..!!
Facebook Messengerல் தொடர்புகொள்ளும் அவர், சந்தேகம் ஏற்படாமல் இருக்க Voice Changer என்ற செயலியைப் பயன்படுத்தியதாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார் .
சந்தேகத்திற்கிடமான வகையில் தன்னுடைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகச் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரில் மரக்காணத்தை சேர்ந்த 26 வயதான கிருஷ்ணனை போலீசார் கைது செய்து உள்ளனர்.