கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திலுள்ள 19 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் மற்றும் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது வருகிறது.
மேலும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்கள் வெள்ளம் காடாய் காட்சி அளிக்கிறது.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திலுள்ள 19 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் மற்றும் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி,நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சை,விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் ராணிப்பேட்டை, அரியலூர், வேலூர், சேலம், தருமபுரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.