அரசு பள்ளி முப்பெரும் விழா (school annual day) ஒன்றில் மதுரை வீரன் மற்றும் கருப்பசாமி வேடமணிந்து மாணவர்கள் ஆடிய போது, மாணவிகளுக்கு அருள் வந்து ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவாரூர் அருகே உள்ள காட்டூரில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் ஆண்டு விழா இலக்கிய மன்ற விழா மற்றும் விளையாட்டு விழா ஆகியவை முப்பெரும் விழாவாக (school annual day) நடைபெற்றது.
இதையும் படிங்க : Legal Expert ஃபாலி நாரிமன் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்!
அதில், மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில், அந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் சபரிஷ் என்பவர் மதுரை வீரன் வேடத்தில் வெள்ளை உடை தரித்து மாணவர்களுக்கு மத்தியில் நடந்து வந்து மேடையேறினார்.
இதையும் படிங்க : Rayan : இதுதான் ராயன் பட கதையா? எஸ்.ஜே.சூர்யாவின் அட்ராசிட்டீஸ்!
அவருக்கு சக மாணவர்கள் உற்சாகமாக மலர் தூவி வரவேற்பளித்தனர்.
அந்த மாணவனைத் தொடர்ந்து மாணவன் தீரன் கருப்பசாமி வேடமணிந்து நடனமாடினார். அது அங்கிருந்த பார்வையாளர்களை பரவசமடைய வைத்தது. மேலும், மாணவன் தீரன் தத்ரூபமாக கருப்பசாமி வேடமணிந்து ஆவேச நடனமாடிய போது,
பரவசமடைந்த மாணவிகள் சிலர் அருள் வந்து ஆடியதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.