தமிழகத்தில் கனமழை காரணமாக இன்று 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு (school holiday) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், ஜூலை மாத தொடக்கம் முதலே தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில் ஜூலை3ம் தேதி முதல் 4 நாட்களுக்கு முதல் மிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று கனமழை பொழிந்ததால் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. மேலும், பள்ளி கல்லூரிக்குச் சென்ற மாணவ மாணவிகள் மலையில் நனைந்து குளிரில் நடுங்கியவாறு சென்றனர்.
இதனால், அதிக குளிர் மற்றும் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று ஜூலை 6ம் தேதி வியாழக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை (school holiday) அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கனமழை எதிரொலியாக ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 4 தாலுகாக்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கேரளாவிலும் தொடர் கனமழை பெய்து வருவதால் மாகே பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளது.