பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை (DEPARTMENT OF SCIENCE AND TECHNOLOGY-DST) 2008 ஆம் ஆண்டு முதல் INSPIRE இன்ஸ்பயர் விருது வழங்கி வருகிறது.
2016 ஆம் ஆண்டு முதல் புத்தாக்க அறிவியல் ஆய்வு MANAK என்ற பெயரில் வழங்கி வருகிறது. MILLION MINDS AUGUMENTING NATIONAL ASPIRATIONS AND KNOWLEDGE (MANAK) இன் செயல்திட்டங்களில் ஒன்றாகும்.
இந்த திட்டம் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் (10 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவர்களின் புத்தாக்க அறிவியல் திறனை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. பள்ளி மாணாக்கர்களிடையே புதுமையான படைப்புகளை வெளிப்படுத்தும் மாணவர்களின் நேரடி வங்கி கணக்கிற்கு ரூ.10000 வழங்கப்படும் .
இன்ஸ்பயர் – மானக் விருதிற்கு தேர்வு செய்யும்போது கருத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்:
- NOVELTY – புதுமையான படைப்புகள்
- SOCIAL APPLICABILITY – சமுதாயத்திற்கு பயன்படும் விதமாக ,பொருந்தும் விதமாக இருத்தல்
- COMPETITIVE ADVANTAGES OVER EXISTING TECHNOLOGIES -தற்சமயம் பயன்பாட்டில் உள்ள தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் விதமாக இருத்தல் வேண்டும்
- COST EFFECTIVENESS – குறைந்த செலவில் தயாரான படைப்புகள்
- USER FRIENDLINESS – கையாள்வதற்கு எளிமையாக இருத்தல்
- சென்ற வருடம் பயன்படுத்திய படைப்புகளை பயன்படுத்தக்கூடாது
- படைப்புகளை பதிவு செய்யும் மொழியை தேர்வு செய்ய வேண்டும்.
- பதிவு செய்யும்போது ஆடியோ/வீடியோ வாக பதிவு செய்யலாம்.
- மாணவர்களின் வங்கி கணக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருத்தல் அவசியம்.
- மாணவர்களின் பெயர் வங்கி கணக்கு புத்தகத்தில் உள்ளது போல பதிவு செய்தல் மிகவும் அவசியம்
- பள்ளிகள் செய்ய வேண்டியன
2023-2024 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுகளுக்கான பதிவுகள் 2023 மே 1 ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. அனைத்து விதமான பள்ளிகளில் இருந்தும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் www.inspireawards-dst.gov.in என்ற இணையதளத்தில் மே 1 முதல் ஆகஸ்டு 31 வரை பதிவு செய்யலாம்.