கரூர் மாவட்டத்தில் இந்த மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் சில மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

கரூர் மாவட்டத்தில் இன்று மழை பெய்து வருவதன் காரணமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

முன்னதாக பெய்த கனமழையால் கரூர் மாவட்டத்தில் பாதிப்புகள் ஏற்பட்டன. இன்னும் சிரமங்கள் நீடிக்கும் நிலையில் இன்று மதியம் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

Total
0
Shares
Related Posts