அறிவித்தபடி ஜூன் 7ம் தேதிக்கு முன்கூட்டியே பள்ளிகளை திறக்கக் கூடாது (early opened) என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை ராமாபுரம் தனியார் பள்ளி இன்று அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்ட (early opened) நிலையில், அது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழ்நாட்டில், அக்னி வெயில் முடிந்த போதும் கோடை வெயில் அதிகமாக இருப்பதையொட்டி பள்ளிகள் திறக்கும் தேதியை 7-ந் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறோம். எனவே, அதற்கு முன்கூட்டியே பள்ளிகளைத் திறக்கக் கூடாது.
அதை மீறி தனியார் பள்ளிகள் திறந்திருந்தால் அந்த பள்ளிகளின் மீது அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வார்கள். சி.பி.எஸ்.இ. பள்ளிக் கூடங்கள் அதுவும் 10-ம் வகுப்புக்கு மேல் திறந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இன்று, ராமாபுரம் வேணியம்மாள் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக் கூடம் இன்று திறக்கப்பட்ட நிலையில், தனியார் பள்ளிகள் திறந்திருந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும்,
இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வித் துறை அதிகாரிகள் மாவட்டவாரியாக இதுபற்றி விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.