தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல்களை பின்வருமாறு காணலாம்..
அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்ப, தற்பொழுது பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே இந்த பள்ளிகளில் தற்காலிகமாக பணியாற்ற இடைநிலை ஆசிரியர்கள் தேவை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதியுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழக அரசின் “இல்லம் தேடி கல்வியைத் திட்டத்தில்” தன்னார்வலராக பணியாற்றி வருபவர்களுக்கும், அல்லது பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களாக இருப்பின், அந்த விண்ணப்பதாரர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைநிலை ஆசிரியர் பணி, தற்காலிக பணி என்பதால், இதற்கு விண்ணப்பங்கள் மூலம் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு மாதம் 12,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், நாளை 29.9. 2023 வெள்ளிக்கிழமை இந்த விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணிகளுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமோ தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் எனதும், மாலை 5 மணிக்குள் இந்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.