உத்தரபிரதேசத்தில் காதலியுடன் ரகசியமாக பேசி வந்த நண்பனின் உயிரை பறித்த காதலனின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஃபேஸ்புக் மூலம் பழக்கமான பெண்ணை விஷால் என்பவர் காதலித்து வந்த நிலையில், தனது அனுமதியின்றி காதலியின் தொலைபேசி எண்ணை திருடிய நண்பர் காதலியுடன் ரகசியமாக பேசி வைத்துள்ளார்
இதனை அறிந்தகொண்ட விஷால் நண்பனை தீர்த்துக்கட்ட முடிவுசெய்துள்ளார் . இதையடுத்து ஒருநாள் நண்பன் கவுதமை விஷால் மது விருந்திற்கு அளித்துள்ள. நண்பனின் அழைப்பை ஏற்று வந்த கவுதமிற்கு விஷால் விஷம் கலந்த மதுவை குடிக்க கொடுத்துள்ளார்.
Also Read : நலத்திட்டங்களை துவக்கி வைக்க தலைநகரம் தாண்டும் முதல்வர் ஸ்டாலின்..!!
பின்னர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்த கவுதமின் உயிர் அவருக்கு தெரியாமலே அவரை விட்டு பிரிந்துள்ளது. பின்னர் கவுதமின் சடலத்தை மறைத்து வைத்த விஷால் தனது அன்றாட வேலையை எந்த வித பதற்றமின்றி செய்துவந்துள்ளார்.
நாட்கள் செல்ல கொலை செய்யப்பட்ட கவுதம் காணாமல்போனதாக குடும்பத்தினர் புகாரளித்ததால் போலீசார் நடத்திய விசாரணையின் போது இந்த உண்மை வெளிச்சத்திற்கு வர தான் தான் கவுதமை கொலை செய்ததாக விஷாலும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விஷாலை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்து அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.