ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சீமான் (seeman)தெரிவித்து உள்ளார்.
சீமான் (seeman)மற்றும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி ,மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் ட்விட்டர் இன்று தற்காலிகமாக முடக்கப்பட்டது.
மேலும் இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளை மீறி அவர்கள் ட்விட்டரில் பதிவிடுவதாக மத்திய அரசு விடுத்த சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று அவர்களது கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்து இருந்தது.
சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனது புதிய ட்விட்டர் கணக்கை தொடர்ந்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தை செங்கோல் நாட்டி திறந்து வைத்துவிட்டு, ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து எழுதும் எழுதுகோல்களை முறித்து,குரல் வளையை நெறிக்கும் இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசின் கொடுங்கொன்மைச் செயல் வெட்கக்கேடானதாகும்.
கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்தை முடக்கி கருத்துச்சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையானக் கருத்தைப் பதிவுசெய்து, துணைநிற்கும் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி என அந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.