புதுச்சேரி தலைமை அஞ்சல் நிலையம் சார்பில், செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் (Selvamal Savings Scheme) கணக்கு புத்தகங்களை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பெண் குழந்தைகளுக்கு வழங்கி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
மத்திய அரசு சார்பில், இந்திய அஞ்சல் துறை மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செல்வ மகள் சேமிப்புத் திட்ட கணக்கு (Selvamal Savings Scheme) புத்தகங்களை ஒப்படைக்கும் விழா, புதுச்சேரி தலைமை அஞ்சல் நிலையம் சார்பில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு பெண்குழந்தைகளுக்கு கணக்கு புத்தகங்கள் வழங்கி நிகழ்ச்சினைத் தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன்,
தொலைநோக்கு பார்வையோடு கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் மிகுந்த வரவேற்பு பெற்று வருவதாகவும், சுமார் 60 லட்சம் பெண் குழந்தைகள் இதனால் பயன் அடைந்து இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
உறவுகளுக்கு இடையிலான பாலமாக அஞ்சல் துறை இருந்து வந்த நிலையில், இன்றைய சூழ்நிலையில் அஞ்சல் துறையை எப்படி பயன்படுத்துவது மேம்படுத்துவது என்ற விதத்தில் பிரதமரின் வழிகாட்டுதலின் பேரில் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்ததில் மகிழ்ச்சி என்றார்.
இந்நிகழ்ச்சியில்,தமிழ்நாடு தலைமை அஞ்சல்துறை ஆணையர் சாருகேசி, சென்னை மாநகர அஞ்சல்துறை தலைவர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.