அமைச்சர் செந்தில் பாலாஜியின்(Senthil balaji) கைதுக்கு பிறகு கோவை மேயரின் சகோதரர் குமார் சில ஆவணங்களை எரிப்பதாக சமூக வலைத்தளங்களில் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தியதை தொடர்ந்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.பிறகு நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பின்னர் கோவை மணியக்காரையன்பாளையம் பகுதியில் மேயர் கல்பனாவின் சகோதரர் குமார் சில ஆவணங்களை எரித்ததாக வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினர் கைது செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பாக ஆவணங்கள் எரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.அது பண வரிவற்றைக்கான ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளது தெரியவந்த உள்ளது.
மேலும் இந்த விவகாரப் பற்றி மேயர் கல்பனாவின் சகோதரரிடம் கேட்டபோது அது தவறான தகவல் எனவும் இது குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.