அமைச்சர் செந்தில் பாலாஜியை(senthil balaji) மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள 6 மாசம் அவகாசம் கேட்ட நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி(senthil balaji) போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சென்னை பிரிவில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆனால் இதில் விசாரணை முறையாக நடைபெறவில்லை என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் தொடரப்பட்டன. இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, ஓட்டுநர் உள்ளிட்ட 5 பிரிவுகளுள், 2 பிரிவுகள் மீதான விசாரணை முழுமையாக நிறைவுபெற்றதாகவும் மீதமுள்ள 3 பிரிவுகளுக்கான விசாரணையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டிய பணிகள் நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க கூடுதலாக 6 மாத கால அவகாசமும் தமிழக அரசு தரப்பில் கோரப்பட்டது. ஆனால் அதற்கு மனுதாரர் தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அனைத்து விசாரணைகளையும் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டனர். அதற்கு மேல் கூடுதல் அவகாசம் எடுத்துக்கொள்ளக்கூடாது எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.