புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி (senthil balaji)சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜாமின் மீதான மனுதாக்கல் செய்துள்ளார்.
சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.கடந்த ஜூன் 15-ஆம் தேதி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது . இதையடுத்து தற்போது புழல் சிறையில் உள்ள முதல் வகுப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு உரிய மருத்துவ வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரத்த கொதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
முன்னதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமீன் மனு தாக்கல் செய்யபட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யபட்ட நிலையில், தற்பொழுது செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜாமின் மீதான மனுதாக்கல் செய்துள்ளார்.
மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தபட்ட நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நாளை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் விசாரணை நடத்த உள்ளதாக நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.