அமலாக்கத்துறை வழக்கில் கைதான செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜூன் 14 ஆம் தேதி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறையில் அடிக்கடி உடல்நல குறைவு ஏற்படுவதால் தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளிக்க உள்ளார் . இரு தரப்பு வாதங்கள் அக்.16இல் நிறைவடைந்ததை அடுத்து இந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா கிடைக்காத என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.