நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகம் செய்யும் முன்னரே காங்கிரஸ் கட்சி அமளியில் ஈடுபட்டதால் அவை 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதிய பாராளுமன்றத்தில் சபை நடவடிக்கைகள் தேசிய கீதத்துடன் ஆரம்பமாகின. புதிய நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையை நிகழ்த்திய பிரதமர் மோடி(pm modi), ‘அனைத்து எம்.பி.க்களையும் வரவேற்கிறோம், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க அமர்வு’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து எம்.பி.க்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி(pm modi) ,இன்று நாம் அனைவரும் ஒன்றாக புதிய பார்லிமென்ட் கட்டிடத்தில் புதிய எதிர்காலத்தை துவக்க உள்ளோம். இன்று, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற உறுதியை மீண்டும் வலியுறுத்தும் நோக்கத்துடன் இங்குள்ள புதிய கட்டிடத்தை நோக்கி நகர்கிறோம், அதை நிறைவேற்ற முழு மனதுடன் உழைக்கிறோம். இந்த கட்டிடம் மற்றும் அதுவும் இந்த மைய மண்டபம் நம் உணர்ச்சிகளால் நிரம்பியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாளில், தனிச் சிறப்பு வாய்ந்த மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றும் வாய்ப்பை இறைவன் தனக்கு அளித்திருப்பதாக குறிப்பிட்டார்.அதனைத் தொடர்ந்து, மத்திய சட்டத்துறை பொறுப்பு அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் ,மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் நகலை தங்களிடம் வழங்கவில்லை என்று கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யும் முன்னர், தொடர் அமளி காரணமாக மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதம் 20ஆம் தேதி நடைபெறும் என்று கூறி, மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.